நிகழாத நிமிடங்கள் : Skipped Beats

Blogged Bliss Sep 03, 2024

அழகிய ஒரு மாலைப்பொழுதில், கலகலப்பான சிரிப்புகளுடனும் இடைநிறாத உரையாடல்களுடனும் அனைவரினதும் கவனத்தை ஈர்ப்பது போல, நூலறுந்த காற்றாடியாக ஒரு நூறு எண்ணங்கள், இரவில். பின்பு, இரண்டே இரண்டு நிமிடங்கள். அந்த சிறு இடைவெளிகளிலேயே வாகை சூடிக்கொள்கின்றது என் மௌனம். மீண்டும் இனிய உணர்வு ததும்பும் பாடல்களுடனும் பல எதிர்பார்ப்புகளுடனும் புலர்கின்றது புதியதொரு காலை.

A hundred thoughts in my dreams, like a beautiful evening, attracting everyone's attention with lively laughter and incessant conversation. Then, just within two minutes, my silence warms up in those small spaces. A new morning dawns again with many expectations.

என்சார்ந்தவரின் குவிமுனையில் உலகம் சற்றே சிறியது.  வெளி உலகுடன் ஏற்படுத்தும் உரையாடல்களை விட ஆழ்மனதுடன் ஈடுபடுத்தும் வாக்குவாதங்களே அதிகம். நிகழாத நிமிடங்களை, சிந்தனையில் கண் முன்னே நிறுத்துவதில் தேர்ச்சி பெற்றவர்கள். எதிர்பார்ப்புக்களும் பின் ஏமாற்றங்களும் புதிதல்ல. இருந்தும் எமக்கான உலகில் என்றும் கதாநாயகர்களே!.

The world is actually a bit smaller in our lens. Arguments with the subconscious mind are more intense than the conversations with the outside world. We are extremely adept at conjuring moments that don't happen. Expectations and then disappointments are nothing new. Yet today and forever heroes in our own world!

தான் நினைப்பதை வெளியில் கூறாமல் தனக்குள்ளேயே வைத்துக்கொள்பவரை "இன்ட்ரோவட்" ("Introvert") என்று பெயர் சூட்டிக் கொள்கின்றனர். இருப்பினும் தமிழில் ஓர் அழகான சொல் உள்ளது. "அகமுக ஆய்வாளர்கள்". இதனை ஒரு குறை என்று கூறுவதை விட ஒரு குண நலன் என கூறுவதே மிகவும் பொருத்தமானது. தனித்து தெரியும் இவர்களும் தனித்துவமானவர்கள் தான்.

An introvert is a person who keeps his thoughts within himself instead of expressing them. It is more appropriate to call this a virtue than a flaw. They are unique people who stand out.

இவர்களை பொறுத்தவரையில் அமைதி என்பது நிசப்தமான சூழல் அல்ல. அமைதி, பல சிந்தனைகளின் சரணாலயம் ஆகும். பலவித உரையாடல்களின் போதான முயற்சிக்கு முதற் தடையாகவும் இது அமைகின்றது. பல எதிர்பார்ப்புக்கள் ஏமாற்றத்தில் சிதறும் முதல் தளமும் இதுவே. இவ்வாறே சமூகத்தை சவாலாக நோக்கும் பாங்கு இவர்களுள் வேரூன்றி விருட்சமாகின்றது.

For them, peace is not a quiet environment. Peace is the sanctuary of many thoughts. It is also the first obstacle in any attempt at conversation. It is also the first platform where many expectations are dashed in disappointment. In this way, the way of looking at the society as a challenge takes root in them.

ஓடாத இப் பொழுதுகளில் இவ்வாறானோர், தவறாக புரிந்து கொள்ளப்படுவதற்கான வாய்ப்புக்களும் அதிகம். உதாரணமாக கூச்ச சுபாவம் உள்ளவர்கள் என பலரும் கூறுவர். உள்ளம் திறந்து பழகாதவர்களாகவும், எதிலும் அதிக நாட்டம்/உற்சாகம் அற்றவர்களாகவும் கருதக்கூடும். பிறரின், தன்மீதான மதிப்பிடுதலுக்கான பயம் என்பதை விட பிறரது புற தூண்டல்களற்ற சூழலுக்கான நாட்டமாகவே இதனை புரிந்து கொள்ள வேண்டும். எவ்வாறாயினும் இவர்களும் கனவால் ஒரு உலகம் அமைத்து தனிப்பறவையாக உல்லாசமாக சிறகடித்துப் பறக்கின்றனர்.

In these static times, such a person is more likely to be misunderstood. For example, many people say that they are shy. May come across as introverted and not very keen/enthusiastic about anything. It should be understood as a desire for an environment free of external stimuli rather than a fear of others' evaluation of oneself. However, these people also create a world out of dreams and fly wildly like independent birds.

இம் மூடிய மனங்களின் தூரிகை, ஏழு வண்ணங்கள் கடந்த அழகிய ஓவியத்தை உருவாக்கவல்லது. சிற்றின்பங்கள் போதும், இவர்கள் வாழ்வை அழகாக்க.  மழையின் ஒலி, மெல்லிய சொற்கள், மென்மையான ஒளி, இவற்றிற்கும் மேலாக தனக்கே உரியதாக சில நிமிடங்கள் போதும். ஆழமான உரையாடல்களும் ஆக்கபூர்வமான பொழுதுபோக்குகளும் இவர்களுக்கு இன்னும் உற்சாகமளிக்கும்.

The brushes of these closed minds can create a beautiful painting beyond the seven colors. Enough of sensuality, make life beautiful for them. The sound of rain, gentle words, soft light, and above all these, a few minutes are enough to be one's own. Deep conversations and a creative activity will make them even more excited.

ஜெ.கே ரவுலிங் முதல் எலொன் மஸ்க் வரை வாழ்வில் வெற்றிகள் கண்ட பலரும் தம்மை இன்ட்ரோவட் ஆகவே வெளிப்படுத்திக்கொள்கின்றனர். குறிப்பாக ஹரி பாட்டர் (Harry Potter) என்னும் உலக புகழ் பெற்ற ஆக்கத்தின் படைப்பாளியான ஜெ.கே ரவுலிங், ஒருநாள் ரயில் பயணத்தின் போது தனது எண்ணங்களை எழுதுவதற்கு, ஒரு பேனாவை சக பயணியிடம் இரவலாக கேட்பதற்கே தயங்கிய ஒருவர். இன்று அவரது படைப்பானது 84 மொழிகளில் 600 மில்லியனுக்கும் அதிகமான பிரதிகள் விற்கப்பட்டு பிரசித்தி பெற்று விளங்குகின்றது. இவர்போல் கலைத்துறையில் சாதிக்கும் பலரும் உள்முக ஆய்வாளர்களாகவே விளங்குகின்றனர்.

From JK Rowling to Elon Musk, many successful people describe themselves as introverts. In particular, JK Rowling, the creator of the world-famous work of Harry Potter, was reluctant to ask a fellow passenger for a pen at night to write down her thoughts during a train journey. Today, her work has sold more than 600 million copies in 84 languages. Many people who achieve in the field of art like her are introverts.

இவர்களால் சிறந்த தலைவர்களாகவும் சாதிக்க முடியும் என்பதற்கு அமெரிக்க முன்னாள் ஜனாதிபதி பராக் ஒபாமா அவர்கள் ஒரு சிறந்த எடுத்துக்காட்டு. தன் வார்த்தைகளை கவனமாக வெளிப்படுத்தும் இவர் ஒரு சிறந்த அவதானிப்பாளரும் ஆவார். தன்னை சுற்றியுள்ள விடயங்களை  நிதானமாக ஆராய்ந்து அர்த்தமுள்ள கருத்துகளை முன்வைப்பது தலைமைத்துவத்தில் இருக்கும் ஒருவருக்கான சிறந்த பண்பாகும். மேலும் மிகப்பெரும் பணக்காரரான பில் கேட்ஸ் இளவயது முதல், தனக்கு சுவாத்தியமான சூழலில் (Comfort Zone ) வாழ்ந்து பழக்கப்பட்டவர். ஒரு ஆசிரியராக தனது எதிர்காலத்தை அமைத்து ஓர் இலகுவான பிற சிக்கல்களற்ற வாழ்க்கை வாழ்வதே இவரது இலக்காக இருந்தது. பின்பு அவரது நண்பர் போல் அலன் (Paul Allen) இன் தூண்டுதலாலேயே தனது நோக்கத்தை மாற்றியமைத்து, முன்வந்து இன்று வாழ்வில் வெற்றி கண்டுள்ளார்.

Former US President Barack Obama is a good example of how these people can become great leaders. He is also a keen observer who articulates his words carefully. Being able to calmly analyze the issues around them and present meaningful opinions is an excellent trait for someone in leadership. And Bill Gates, who is the richest man, has been used to live in his comfort zone since he was young. His goal was to set up his future as a teacher and lead an easy and hassle-free life. Later, with the encouragement of his friend Paul Allen, he changed his purpose and volunteered to find success in life today.

இவ்வாறான குணாதிசயங்களை அறிவியல் ரீதியிலும் விளக்கலாம். சில வகையான நரம்பியல் கட்டமைப்புக்கள் இதற்கு முக்கிய காரணமாக விளங்குகின்றன. நாம் உணரும் மகிழ்ச்சி மற்றும் திருப்தி போன்ற உணர்வுகளுக்கு டோபமைன் எனும் ஒரு நரம்பியல் கடத்தியே காரணமாகும். இந்த டோபமைன் ஆனது பிறரை விட இவர்களுக்கு குறைவாகவே இருந்தாலும் அதிக மகிழ்ச்சி, நெகிழ்ச்சி, ஆவல் மற்றும் சமூக தொடர்புகளின் போது பிறரை விட அதிகளவில் தூண்டப்படுகின்றது.  இதனால் சில நிமிடங்களிலேயே சோர்வாக உணர்கின்றனர். இவ்வேளைகளில் தனிமையை நாடுகின்றனர்.

Such characteristics can also be scientifically explained. Certain types of neural structures are responsible for this. A neurotransmitter called dopamine is responsible for our feelings of happiness and satisfaction. This dopamine is less in them than in others but is stimulated more than others during pleasure, excitement, curiosity and social interactions. Due to this they feel tired within few minutes. They seek solitude during these times.

சமீப காலமாக இனட்ரோவட்ஸ் இன் மிகப்பெரும் பயமாக FOMO ( Fear of Missing Out ) சமூக வலைத்தளங்களில் பெரிதும் பேசப்படுகின்றது. நம் சார்ந்தவரையோ அல்லது அவர்களுடனான மகிழ்ச்சிகரமான மற்றும் பலனளிக்கும் அனுபவங்களையோ இழந்து விடக்கூடுமோ என்ற அச்சமே இதுவாகும். இது, இவர்கள் சமூகமயமாதலை மேலும் தடுக்கின்றது.

FOMO (Fear of Missing Out) is the biggest fear of introverts in recent times. It is the fear of losing our loved one or the joyous and rewarding experiences with them. This further hinders their socialization.

இவ்வாறான பயம் உருவாவதை குறைப்பதற்கு நாம் சில உத்திகளைக் கையாளலாம். சமூக வலைத்தளங்களில் ஈடுபடும் நேரத்தை இயன்றளவு குறைப்பதன் மூலம் நம் வாழ்க்கை மீதான பிறரின் செல்வாக்கை குறைத்துக் கொள்ளலாம். வெற்றிகளையும் மகிழ்ச்சி தரும் விடயங்களையும் அதிகம் சிந்திக்கலாம். பிறருடன் நம்மை ஒப்பிடுவதை நிறுத்தி, நமக்கு கிடைக்கும் மிகச்சிறு உதவிகளுக்கும் நன்றி கூறுவதை ஒரு பழக்கமாக கொள்ள வேண்டும். இயன்றளவு வாரம் ஒரு முறையாவது எமக்கு மகிழ்ச்சி தரும் செயற்பாடுகளில் ஈடுபடுவது வாழ்வை மேலும் அழகாக்கும்.

We can employ some strategies to reduce the formation of such fears. By reducing the time spent on social media as much as possible, we can reduce the influence of others on our lives. Think more about successes and things that make you happy. We should stop comparing ourselves with others and make it a habit to be grateful for even the smallest favors we receive. Engaging in activities that make us happy at least once a week will make life more beautiful.

மனதின் மூடிய கதவுகளுக்குள் பல நிகழாத நிமிடங்கள் இருந்தாலும் கூட எளிமையான கற்பனை காட்சிகள் மூலம் மகிழ்ச்சியையும் நெகிழ்ச்சியையும்  அள்ளித் தந்து பிரியா துணையாகிவிடுகின்றது, என் கனா!

Even though there are many skipped beats within the closed doors of the mind, at the end, dreams become a closest companion by bringing joy and happiness through simple fantasy scenes!

Tags

Great! You've successfully subscribed.
Great! Next, complete checkout for full access.
Welcome back! You've successfully signed in.
Success! Your account is fully activated, you now have access to all content.